செப்.1ம் தேதி முதல் நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

1 week ago 4

சென்னை: செப்டம்பர்.1ம் தேதி முதல் நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் தெரிவித்தார்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும்

நேரடி கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 20 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் நாட்களில் சரிபார்ப்பு பணிகள் முடிந்த பிறகு தகுதியானவர்களுக்கு 19 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.

நுகர்வோருக்காக தனி வலைதளம், செயலி

நுகர்வோர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க தனி வலைதளம், செயலி உருவாக்கப்படும்.

திருவாரூரில் ரூ.80 கோடியில் சேமிப்புக் கிடங்குகள்

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.80 கோடியில் நவீன மேற்கூரையுடன் நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். நாகை மாவட்டத்தில் ரூ.58 கோடியில் நவீன மேற்கூரையுடன் நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் 33,500 மெட்ரிக் டன் திறன் கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 இடங்களில் 31,500 மெட்ரிக் டன் திறன் கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் 3,400 மெ.டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு ரூ.5 கோடியில் கட்டப்படும். 12 நவீன அரிசி ஆலைகளில் ரூ.7.5 கோடியில் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்படும்.

நவீன மயமாக்கப்படும் அமுதம் அங்காடிகள்

நவீன மயமாக்கப்படும் அமுதம் அங்காடிகள்.மக்கள் வேண்டுகோளை ஏற்று பகுதி நேர ரேசன் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. அமுதம் அங்காடிகள் படிப்படியாக நவீன மயமாக்கப்படும்.

3,500 பேருக்கு வேலை வாய்ப்பு

நுகர்வோர் வாணிபக் கழகத்தில் 3500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

The post செப்.1ம் தேதி முதல் நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article