
நெல்லை,
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த விஜயன்(26) என்ற இளைஞரும், பவித்ரா(24) என்ற இளம்பெண்ணும், கடந்த 7-ந்தேதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளனர்.
இவர்கள் அண்மையில்தான் திருமணம் செய்து கொண்டதாக வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை முதல் இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசார், இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதே சமயம், உயிரிழந்த இருவரின் குடும்பங்களை தொடர்பு கொண்டு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இளம் ஜோடியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.