சென்னையில் ஹவாலா பணத்தை போலீஸ் என்று கூறி மிரட்டி பறிமுதல் செய்த 2 பேர் போலீசார் கைது

4 months ago 29
ஹவாலா பணத்தை போலீஸ் என்று கூறி மிரட்டி பறிமுதல் செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெய்னுல் ஆசாத் என்பவரை  போலீஸ் சீருடையில் வந்து  மிரட்டி அவரிடம் இருந்த சுமார் 6 லட்சம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு  சென்றுவிட்டதாக ஆசாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில்  ஆசாத் கொண்டு வந்த பணம் ஹவாலா பணம் என்பது தெரிய வந்தது. சிசிடிவியில் பதிவான இருசக்கர வாகன எண்ணை வைத்து  சார்லஸ் என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர்.   ஏலச்சீட்டு மூலமாக 13 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால் தனது  நண்பரான  ராமச்சந்திரன் உடன் சேர்ந்து ஜெய்னுல் ஆசாத்திடமிருந்து ஹவாலா பணத்தை பறித்து சென்றதாக கைதான சார்லஸ் தெரிவித்துள்ளார்.
Read Entire Article