சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். இது குறித்து முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டின் மண்,மொழி, மானம் காக்க, சாதி, மதம், அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பிரச்சார இயக்கத்தை ஜுலை முதல் நாளன்று தொடங்கிவைத்தார். இன்று (ஜூலை 3) காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். இது குறித்து முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டின் மண்,மொழி, மானம் காக்க, சாதி, மதம், அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்.