சென்னையில் ரவுடி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு; போலீசார் அதிரடி

1 week ago 2

சென்னை,

தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி ஐகோர்ட்டு மகாராஜா. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடையே, சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்குமுன் போலீசார் நடத்திய சோதனையில் தூத்துக்குடியை சேர்ந்த சில ரவுகள் கைது செய்யப்பட்டனர். அந்த ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல ரவுடி ஐகோர்ட்டு மகாராஜாவும் சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், சென்னை கிண்டியில் பதுங்கி இருந்த ரவுடி ஐகோர்ட்டு மகாராஜாவை இன்று போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

ஆதம்பாக்கத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளரை கொலை செய்யும் நோக்கத்தோடும் தூத்துக்குடி ரவுடி கும்பல் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி ஐகோர்ட்டு மகாராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Entire Article