சென்னை: சென்னையில் அனைத்து மின்சார ரயில்களிலும் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறிப்பு சம்பவம் எதிரொலியாக கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் 12 மணி வரை செல்லும் அனைத்து மின்சார ரயில்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர். மின்சார ரயில் வழித்தடங்களில் இரவு 10 முதல் 12 வரை அனைத்து நடைமேடைகளிலும் பாதுகாப்பு பணியில் இருப்பர். மின்சார ரயிலின் பெண்கள் பெட்டிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் மின்சார ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு appeared first on Dinakaran.