சென்னையில் மழை, வெள்ள நிலவரம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!!

2 months ago 11

சென்னை: சென்னையில் மழை பாதிப்பு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டு, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வுக்குப் பின்னர், துணை முதலமைச்சர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என்று IMD (India Meteorological Department) கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் காலை 7.30 மணி நிலவரப்படி பல மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. சராசரியாக சென்னையில் 3.60 செ.மீ., தென் சென்னையில் சராசரி 5.5 செ.மீ, பெருங்குடியில் 7.35 செ.மீ., மழை பெய்திருக்கிறது.

அதேபோல, செங்கல்பட்டில் 1.06 செ,மீ., திருவள்ளூரில் 0.6 செ,மீ., காஞ்சிபுரத்தில் 0.5 செ.மீ., உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்திருக்கின்றது. நம்முடைய முதலமைச்சரின் கட்டளையின்படி இன்று GCC-இல் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை (ICCC) நாங்கள் ஆய்வு செய்திருக்கின்றோம். முன்னேச்சரிகை நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தோம். 1,194 மோட்டார் பம்புகள், 158 சூப்பர் சக்கர் இயந்திரங்கள், 524 ஜெட் ரோடிங் ( Jet Rodding ) இயந்திரங்களும் தயாராக உள்ளன.

இது அக்டோபர் மாதம் பெய்த மழைக்கு பயன்படுத்தி இருந்ததை விட 21 சதவிகிதம் அதிகமாக்கி இருக்கின்றோம். அதேபோல, Previous October மழை அனுபவத்தின் அடிப்படையில், கண்காணிப்பு அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், கூடுதல் மோட்டார்களை mobilise செய்துள்ளோம். GCC சார்பில், 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. 120 உணவு தயாரிப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளன. கடந்த அக்டோபர் மாதம் 98 ஆக இருந்தது, அதையும் உயர்த்தியிருக்கின்றோம்.

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், கணேசபுரம் சுரங்கப்பாதை தவிர, மற்ற 21 சுரங்கப்பாதைகளில் வழக்கமான போக்குவரத்து போய்க் கொண்டிருக்கிறது. அதுவும், ரயில்வே மேம்பாலம் பணியை மேற்கொள்வதற்காக கணேசபுரம் சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. காலை 9:30 மணி வரை எந்த பகுதியிலும் பெரிதாக தண்ணீர் தேங்கவில்லை. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். Chennai Corporation Commissioner, GCC TEAM, அமைச்சர்கள், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் இப்படி அனைவரும் களத்தில் இருக்கின்றோம்.

மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த அனைத்து விரைவான நடவடிக்கைகளையும் கண்டிப்பாக எடுப்போம். மக்களும், பத்திரிகை நண்பர்களும், ஊடகங்களும் எங்களுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கால்வாய்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை முடித்துவிடுவோம். இரண்டு நாட்களுக்கு முன்பாக திருச்சி, மதுரை, தஞ்சாவூர் இங்கெல்லாம் மழை பெய்து கொண்டிருந்தது. இப்போது எழிலகம் மாநில செயல்பாட்டு மையத்திற்கு போய்க் கொண்டிருக்கிறேன்.

இப்போதைக்கு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் மட்டும் தான் அதிக கனமழை எதிர்ப்பார்க்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இன்னும் செய்திகள் வரவில்லை. சமூக ஊடகங்களில் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு உடனுக்குடன் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரியளவில் புகார்கள் ஏதும் வரவில்லை. GCC-யில் மொத்தம் 22,000 நபர்கள் பணியில் இருக்கின்றனர். மழைநீர் சேகரிப்பிற்காகதான், மழைநீர் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அனைத்து கட்டிடங்களுக்கும் மழைநீர் சேகரிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு துணை முதலமைச்சர் பேசினார்.

The post சென்னையில் மழை, வெள்ள நிலவரம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Read Entire Article