சென்னையில் புறநகர் ரெயில் சேவையில் நேரம் மாற்றம்

6 months ago 24

சென்னை,

சென்னையில் அனைத்து மின்சார ரெயில்களின் அட்டவணை ஜனவரி 2-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை - செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி உள்பட அனைத்து வழித்தட மின்சார ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "01.01.2025 முதல் அமுலுக்கு வரும் வகையில் மெயில்/எக்ஸ்பிரஸ் ரெயில் நேர மாற்றங்களைக் கருத்தில் கொண்டு பயணிகளின் தேவை மற்றும் செயல்பாட்டுக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்துப் பிரிவுகளுக்கும் புறநகர் ரெயில் நேரங்கள் திருத்தப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட புறநகர் கால அட்டவணை 02 ஜனவரி 2025, (வியாழன்) முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் வார நாள் ரெயில் சேவைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 2-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரெயில்களின் அட்டவணை முழு விபரம்:-

Revised weekday pattern of EMU train service timings in all sections of #ChennaiDivision, effective from 02nd January 2025.Passengers, kindly take note.#SouthernRailway #RailwayAlert pic.twitter.com/17Q9BkLqdI

— DRM Chennai (@DrmChennai) December 31, 2024
Read Entire Article