சென்னை: சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் அருகில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். சென்னையில் நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் அனுமதியின்று செயல்பட்டு வரும் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் அருகில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
ஒரே நாளில் 150க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
The post சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் அருகில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்! appeared first on Dinakaran.