சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..

4 months ago 30
தமிழக விளையாட்டு ஆணையம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் சென்னை 'சைக்ளோத்தான் - 2024' போட்டியை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை காலை 4.30 மணி முதல் 9 மணிவரை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. மனித சக்தி பெருக்கம், நிலைத்த வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்விற்காக நடத்தப்படும் இந்தப் போட்டி, அக்கரை சந்திப்பு துவங்கி கோவளம் வழியாக மாமல்லபுரம் பூஞ்சேரி சந்திப்பு வரை நடைபெற உள்ளது. போட்டி நேரத்தில் உள்ளூர் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும், பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பிவிடப்படுமென காவல்துறை அறிவித்துள்ளது. 
Read Entire Article