சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,720 பேர் 33 நிவாரண முகாம்களில் தங்கவைப்பு: சென்னை மாநகராட்சி

3 months ago 18

சென்னை: சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,720 பேர் 33 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்

மழை காரணமாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள்:

*வடகிழக்குப் பருவமழை சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 6.44 மி.மீ.

*மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்ந்த மரங்கள் எண்ணிக்கை 77 இதுவரை 77 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

* சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள்

*ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

*இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1720 நபர்கள் அழைத்து வரப்பட்டு 33 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

*இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.

*பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க 98மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன.

*(16.10.2024) அன்று இரவு வரை மொத்தம் 14,60,935 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

*பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 388 அம்மா உணவகங்களிலும் இன்றும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

*சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் அனைத்து சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது.

*நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 531 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

*மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

*கடந்த 24 மணிநேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 7470 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

*மீட்புப்பணியில் ஈடுபட சென்னையில் 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது.

*மழைக்காலத்தினை முன்னிட்டு, பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் இன்று 213 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னை குடிநீர் வாரியம்

*கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள்

*மற்ற மாநகராட்சி / நகராட்சி / மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சூப்பர் சக்கர் இயந்திரங்கள் 89 எண்ணிக்கை

*பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும் டீசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.

*சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது காலை 8 மணி வரை 705 நடைகள் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

*பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 300 நிவரான மையங்கள் மற்றும் 98 சமையல் கூடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

The post சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1,720 பேர் 33 நிவாரண முகாம்களில் தங்கவைப்பு: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Read Entire Article