சென்னையில் தனியார் மதுபான ஆலை வசமுள்ள அரசு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

1 week ago 5

சென்னை: மதுரவாயல், வளசரவாக்கம் பகுதியில் தனியார் மதுபான ஆலை வசம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை உடனடியாக மீட்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் ஏப்.21-ம் தேதிக்குள் அகற்றவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோகன் மதுபான ஆலை நிறுவனத்துக்கு சொந்தமாக வளசரவாக்கம், மதுரவாயல் பகுதியில் இருந்த சுமார் 248 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கடந்த 1975-ம் ஆண்டு கையகப்படுத்தி உத்தரவிட்டது. இந்த நிலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் புதிய ராமாபுரம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து, கடந்த 2017-ம் ஆண்டு மோகன் மதுபான ஆலை நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Read Entire Article