சென்னையில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

1 week ago 3

சென்னை ,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது

இக்கூட்டத்தில் , பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் சாலையில் வாலாஜாசாலை போக்குவரத்துசந்திப்பு முதல் கலங்கரை விளக்கம் வரையிலும், புதிய ஆவடி சாலையில் எம்.டி.எச்.சாலையில் இருந்து பெரியார் சாலை வரையிலும், சர்தார்பட்டேல் சாலையில் காந்திமண்டபம் முதல் அண்ணாசாலை சந்திப்பு வரையிலும், காந்திமண்டபம் சாலையில் அண்ணாநூற்றாண்டு நூலகம் முதல் கோட்டூர்புரம் பாலம் வரையிலும், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் சென்னைசிட்டி சென்டர் முதல் காமராஜர் சாலை வரையிலும், கிரீன்வேஸ் சாலையில் போர்சோர் எஸ்டேட் முதல் திரு.வி.க. பாலம் வரையிலும் உள்ள பேருந்து போக்குவரத்து சாலைகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய மேம்பாலங்கள் அமைப்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்குஉரிய அறிவுரைகளை உதயநிதி ஸ்டாலின்வழங்கினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்அரசுஉயர்அலுவலர்கள்கலந்துகொண்டனர்.

Read Entire Article