சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழை... சாலைகளில் வெள்ளம் - புகைப்படங்கள்

3 months ago 18

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்ய தொடங்கிய நிலையில், இன்று காலையில் இருந்து கனமழையாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

நுங்கம்பாக்கம், கிண்டி, தி.நகர், கொளத்தூர், புரசைவாக்கம், புளியந்தோப்பு, பெரம்பூர், கீழ்ப்பாக்கம் கோட்டூர்புரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, ஐஸ்அவுஸ், பழைய வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், மணலி, மாதவரம்,திருவொற்றியூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலைகளில் சூழ்ந்துள்ள மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல சென்னையின் பல்வேறு இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்காக உணவுக் கூடங்கள் மூலம் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

நுங்கம்பாக்கம் மெயின் ரோட்டில் குளம் போல் தேங்கிய மழை நீரில் கார்கள் மூழ்கிய படி சென்றன.

சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழையால் கொரட்டூர் காவல் நிலையம் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.

 

சென்னை கொரட்டூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

 

பெரம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

 

அகரத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் நின்று பால்பாக்கெட் வாங்கி சென்ற மக்கள்.

 

சென்னையில் பெய்து வரும் கனமழையால் காக்ஸ் ரோட்டில் தேங்கிய மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றபோது எடுத்த படம்.

 

கொளத்தூர் குமரன் நகரில் உள்ள சாலைகளில் தேங்கிய மழை நீர்.

 

ஓட்டேரி பேருந்தில் நிலையத்தில் தேங்கிய மழை நீரில் மக்கள் நடந்து சென்ற காட்சி.

 

சென்னையில் மழையில் சிக்கிய மக்களை போலீசார் வாகனங்களில் மீட்டனர்.

 

போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பு மழைநீர் தேங்கியுள்ளது.

 

வேளச்சேரியில் தெருக்களில் மழைநீர் புகுந்ததால் படகுகளில் மக்கள் மீட்கப்பட்டனர்.

 

 

Read Entire Article