சென்னையில் கனமழை எச்சரிக்கை: சூப்பர் மார்க்கெட்டுகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

3 months ago 23

சென்னை,

15, 16ம் தேதிகளில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது எனவும், நாளை முதல் பல்வேறு பகுதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் 15 மற்றும் 16ம் தேதிகளில் கன முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வரும் 16-ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 20 செ.மீ., மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை கனமழை, மின்சாரம் நிறுத்தம் என்று வெளியாகும் தகவல்களால், சூப்பர் மார்க்கெட்டுகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் பல கடைகளில் பொது மக்கள் குவிந்ததால், அவர்கள் எடுத்து வரும் பொருட்களை கணக்கிட முடியாமல் பணியாளர்கள் சிரமத்துக்குள்ளாயினர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெட்டி கடை முதல் சூப்பர்மார்க்கெட் வரை ஒரே பரபரப்பாக காணப்படுகிறது. மெழுகுவர்த்தி, திண்பண்டங்கள், டார்ச்லைட்டுகள் உள்ளிட்டவை மக்கள் வாங்கியதை காண முடிந்தது.

Read Entire Article