சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின்சார பேருந்துகள் ஏப்ரல் முதல் இயக்கம்: அமைச்சர் தகவல்

4 months ago 28

சென்னை: சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: "சென்னையில் மாசு இல்லாத பொது போக்குவரத்து சேவையை அளிக்கும் விதமாக நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை மொத்த விலை ஒப்பந்த மாதிரி (Gross Cost Contract) இயக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான டெண்டரில் மூன்று நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில் OHM Global Mobility Private Ltd., (Subsidiary of Ashok Leyland Ltd & SWITCH Mobility Automotive Limited) நிறுவனத்துடன் மாநகர போக்குவரத்துக் கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Read Entire Article