சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச அளவில் நிலவில் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. திருமணம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தங்கம் வாங்குவது அதிகரித்துள்ளது. சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.58,640-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,349-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.100-க்கு விற்பனையாகிறது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.58,720க்கு விற்பனை!! appeared first on Dinakaran.