சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 9ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் தினம், தினம் புதிய உச்சத்தை பதிவு செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்றும், இன்றும் தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
சென்னையில் நேற்று(ஏப்.23) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.72,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.9,015-க்கும், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111க்கும், ஒருகிலோ ரூ.1,11,000க்கும் விற்பனையானது. ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று(ஏப்.23) குறைந்த நிலையில் இன்றும் குறைந்துள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,005க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.111க்கும், ஒருகிலோ ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஏறிய வேகத்தில், இறங்கி வருவதால் நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன? appeared first on Dinakaran.