சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம்

2 weeks ago 6

சென்னை,

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். தலைநகர் சென்னையிலும் பட்டாசுகள் வெடித்து மக்கள் பண்டிகையை கொண்டாடினர். இதனிடையே, ஒரே நேரத்தில் அதிக அளவில் பட்டாசுகள் வெடித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் பட்டாசுகளை வெடித்தனர்

ஒரே நேரத்தில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து வருவதால் சென்னை மாநகரம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் என பொதுமக்கள் சிரமத்தை எதிர் கொண்டுள்ளனர்.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தகவலின்படி தற்போது, சென்னையில் 4 இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. பெருங்குடி - 262, ஆலந்தூர் - 258, அரும்பாக்கம் - 248, வேளச்சேரியில் 224 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளது. அதேபோல, கொடுங்கையூர் - 165, மணலி - 189, ராயபுரத்தில் 169 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு உள்ளது. சென்னையில் எந்த இடத்திலும் தரமான காற்று தற்போது இல்லை என்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Read Entire Article