
சென்னை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழக உள்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய பரவலாக மழை பெய்தது.
எழும்பூர், மெரினா, வடபழனி, கிண்டி, அண்ணாநகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சாந்தோம், எம்.ஆர்.சி.நகர், கோயம்பேடு, அமைந்தகரை, முகப்பேர், நுங்கம்பாக்கம், தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், மேடவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்பட சென்னையின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.
வரும்நாட்களில் மழை மேலும் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.