சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

3 hours ago 2

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில் ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், எழும்பூர், அடையாறு, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை,தரமணி, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கிண்டி, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் மழையில் நனைந்தபடியெ செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்கின்றனர்.

Read Entire Article