சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 10 விமான சேவைகள் ரத்து

3 months ago 19

சென்னை: சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல், 10 விமான சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம், பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா விமானம் பெங்களூரு செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. அதேபோல், நேற்று காலை 7.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னை வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மும்பையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், பகல் 1 மணிக்கு அந்தமானில் இருந்து வரும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மதுரையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம், இலங்கையில் இருந்து வரும் ஏர் இந்தியா விமானம் ஆகிய 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமலும், நிர்வாக காரணங்களாலும் வருகை விமானங்கள் 5, புறப்பாடு விமானங்கள் 5 என மொத்தம் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

The post சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 10 விமான சேவைகள் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article