
சென்னை,
சென்னை விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மும்பையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை கண்காணித்த அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமாக வந்த 6 பேரிடம் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களின் உள்ளாடைகளில் 3.5 கிலோ தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூபாய் 2.8 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.