சென்னை: சென்னை வண்டலூரில் உயர்நிலை மற்றும் வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேர விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்தவகையில் வனத்துறை அமைச்சர் பேசுகையில், தமிழ்நாட்டில் வனப்பகுதியில் புலி, யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
வனப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நிதிநிலை அறிக்கையில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 83 மரகத பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வன உயிரின புத்தாக்க வளர் மையங்கள் அமைக்கப்படும். வன உயிரின பாதுகாப்பு மேம்பாட்டு அறிவியல் நிறுவனத்தில் 2 புதிய ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். ரூ.8 கோடியில் பழங்குடியினர் பள்ளி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.திண்டுக்கல் மாவட்டத்தில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு அதிவிரைவுப் படை உருவாக்கப்படும். என தெரிவித்தார்.
The post சென்னை வண்டலூரில் உயர்நிலை மற்றும் வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்படும்: அமைச்சர் பொன்முடி appeared first on Dinakaran.