சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் தடங்களில் 100% தானியங்கி சிக்னல் முறை - ‘கவாச்’ தொழில்நுட்ப மாற்றத்துக்கு தயார்

2 weeks ago 4

சென்னை: சென்னை - ரேணிகுண்டா, சென்னை - அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் 100 சதவீதம் தானியங்கி சிக்னல் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னை - ரேணிகுண்டா மார்க்கம் கவாச் தொழில்நுட்பத்துக்கு (மேம்பட்ட ரயில் பாதுகாப்பு அமைப்புகளுக்கு) மாறுவதற்கு எதிர்காலத்தில் தயாராக உள்ளது.

ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரயில் தண்டவாளங்களை வலிமைப்படுத்துவது, நவீன சிக்னல் முறை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர வழித்தடம் என்று அழைக்கப்படும் ரயில் தடங்களில் அமைக்கப்படுகிறது.

Read Entire Article