சென்னை: ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு

4 months ago 29

சென்னை,

சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சென்னையிலிருந்து, மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூரில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் பயணித்தார். அவர் ரெயிலின் படிக்கட்டில் அமர்ந்து காலை நீட்டியவாறு பயணித்துள்ளார்.

இந்த நிலையில் ரெயில், சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்தபோது, அவரது கால்கள் நடைமேடையில் உரசியது. இதையடுத்து ரெயிலில் இருந்து தவறி விழுந்த அவர் சுமார் 150 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டு, பின்னர் ரெயிலின் அடியில் சிக்கி உயிரிழந்தார். ரெயிலில் இருந்து பாலமுருகன் தவறி விழுந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த பரிதாபம்

ரயிலில் இருந்து இளைஞர் தவறி விழுந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சி...

சென்னை எழும்பூரில் இருந்து சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த காட்டுமன்னார் கோவிலை… pic.twitter.com/8GwTrXkWiN

— Thanthi TV (@ThanthiTV) October 3, 2024

Read Entire Article