சென்னை சென்ட்ரல் - ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி அதி விரைவு ரயில் சேவையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது, தமிழகத்தில் வாழும் ராஜஸ்தான் மக்கள் அவரை சந்தித்து, சென்னை சென்ட்ரல் - ராஜஸ்தான் இடையே கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். இந்த கோரிக்கையை ரயில்வே வாரியம் பரிசீலித்து, சென்னை சென்ட்ரல் - ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதி இடையே புதிய அதிவிரைவு ரயில் இயக்க ஒப்புதல் அளித்தது.