சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் 90 லட்சத்து 83 ஆயிரத்து 996 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
பயணிகளுக்கு நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்து வருகிறது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.