சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதிகளை நவ.15-க்குள் பதிவு செய்ய உத்தரவு

3 months ago 23

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை வரும் நவம்பர் 15-ம் தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மிசித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் http://tnswp.com இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யலாம்.

Read Entire Article