சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன: உதயநிதி ஸ்டாலின் தகவல்

4 hours ago 3

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, திருவெற்றியூரில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1,500 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: சென்னையில் பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருக்கும் மக்களுக்கு பட்டா கொடுக்கப்படும் என்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது முதல்வர் வாக்குறுதி கொடுத்தார். அதற்காக வருவாய்த் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழுவையும் நியமித்தார். அந்தக் குழு பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்தி பட்டா கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

Read Entire Article