சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை

2 months ago 13

சென்னை,

தமிழகம் உள்ளிட்ட தென் மாநில கிழக்கு கடலோர பகுதிகளின் மேல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் மேல் என இரண்டு வளி மண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 1மணி நேரமாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, கொரட்டூர், வடபழனி, நங்கநல்லூர், மேடவாக்கம், வேளச்சேரி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் 1 மணி நேரத்தில் 10 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இன்னும் 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்நிலையில் கனமழை பெய்துவருவதால் பட்டாசுகளின் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  

Read Entire Article