சென்னை: மணலி புதுநகரில் அதிக மழை பதிவு

2 hours ago 2

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நள்ளிரவில் இருந்து தற்போது வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அடையாறு, திருவான்மியூர், மணலி, வண்ணார்பேட்டை, சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை அதிகபட்சமாக மணலி புதுநகரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாதவரத்தில் -10 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. தொடர் மழையால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் அரசு, தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சற்று சிரமத்தை சந்தித்துள்ளனர்.

Read Entire Article