சென்னை பெருநகர காவல்துறையில் ஊர்க்காவல்படை துணை மண்டல தளபதி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

3 months ago 15


சென்னை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பெருநகர காவலில் 4 மண்டலத்திற்கு உண்டான ஊர்க்காவல் படை துணை மண்டல தளபதிக்கான (துணை ஏரியா கமான்டர்ஸ்) பணியில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியில் சிறப்பாக மற்றும் மெச்சத்தகுந்த வகையில் சேவை புரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் குடியரசுத்தலைவர் பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

18 வயது முதல் 50 வயதிக்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்ப கடிதத்துடன் வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி மாலை 5 மணிக்குகள் சென்னை பெருநகர ஊர்க்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை-15 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம். மேற்கண்ட பணிக்கான கூடுதல் தகவலுக்கு 9498135190, 9566776222 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சென்னை பெருநகர காவல்துறையில் ஊர்க்காவல்படை துணை மண்டல தளபதி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article