சென்னை துறைமுகத்தில் கடலோரக் காவல்படை அதிகாரியுடன் கடலில் விழுந்த கார்

3 months ago 12
சென்னை துறைமுகத்தில் கடலோரக் காவல் படை அதிகாரியை அழைத்துச் சென்ற கார் ரிவர்சில் இயக்கும்போது கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், காருடன் மூழ்கிய ஓட்டுநரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜொகேந்திர காண்டா என்ற அந்த அதிகாரியை துறைமுகத்தின் ஜவஹர் டாக் என்ற இடத்துக்கு அழைத்துச் செல்வதற்காகச் சென்ற ஓட்டுநர் முகம்மது சகி, காரைப் பின்னோக்கி இயக்கியபோது, பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தண்ணீருக்குள் விழுந்த காரின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு ஜொகேந்திர காண்டா தப்பித்த நிலையில், ஓட்டுநர் முகம்மது ஷாகியால் தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. கடலோரக் காவல் படையினருடன் இணைந்து தீயணைப்புத்துறையினர், போலீசார் என 50க்கும் மேற்பட்டோர் முகம்மது சகியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read Entire Article