
சென்னை,
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
காட்பாடி யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை - திருவண்ணாமலை மெமு பயணிகள் ரெயில், திருவண்ணாமலை - தாம்பரம் ரெயில் உள்பட 6 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி, 16-ம் தேதி (இன்று) 18-ம் தேதி ஆகிய நாட்களில், சென்னை கடற்கரை - திருவண்ணாமலைக்கு மாலை 6 மணி (66033), காட்பாடி - திருப்பதிக்கு இரவு 9.10 மணி ( 67210), , திருப்பதி - காட்பாடிக்கு இரவு 7.10 மணிக்கு (67209) இயக்கப்படும் மெமு பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, திருவண்ணாமலை - தாம்பரத்துக்கு 17, 19 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் மெமு பயணிகள் ரெயில் (66034) ரத்து செய்யப்பட உள்ளது.
பகுதி ரத்து: 16-ம் தேதி (இன்று) 18-ம் தேதி ஆகிய நாட்களில், அரக்கோணம் - காட்பாடிக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் rஎயில் (66057), சேவூர் - காட்பாடி இடையேயும், விழுப்புரம் - காட்பாடிக்கு, இரவு 7.10 மணிக்கு புறப்படும் மெமு பயணிகள் ரெயில் (66026), வேலூர் - காட்பாடி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
கும்மிடிப்பூண்டி மார்க்கம்: கவரைப்பேட்டை - கும்மிடிப்பூண்டி இடையே ரெயில்வே பொறியியல் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் உள்பட 19 ரெயில்களின் சேவையில் 16, 19 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.