சென்னை: தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - மேலாளர் கைது

2 weeks ago 2

சென்னை,

சென்னை தாம்பரத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜராஜன் (37) என்பவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண்ணுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இந்தப் புகாரின் பேரில் அலுவலக மேலாளர் ராஜராஜனை தாம்பரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் விசாரணைக்குப் பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Read Entire Article