சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பட்டினியால் மயங்கிய புலம்பெயர் தொழிலாளி உயிரிழப்பு

3 months ago 30

சென்னை,

மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 11 பேர் விவசாய வேலைக்காக சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்துள்ளனர். அங்கு 3 நாட்கள் வேலை செய்த பின்னர், அடுத்த வேலை கிடைக்காததால் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கடந்த 13-ந் தேதி சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். மேலும் உணவு இல்லாமல் 16-ந்தேதி வரை ரெயில் நிலைய பிளாட்பாரத்திலேயே தங்கியுள்ளனர்.

இதில் 5 பேர் பட்டினியால் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை ரெயில்வே காவல்துறையினர் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விசாரணையில் அவர்கள் மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் பகுதியைச் சேர்ந்த சமர்கான் , மாணிக் கோரி , சத்யா பண்டிட் , ஆசித் பண்டிட், கோனாஸ் ஸ்மித் என்பது தெரிய வந்தது.

இவர்களில் 4 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சையில் இருந்து வந்த சமர்கான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 35 வயதாகும் சமர்கானுக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். சமர்கானின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். மேலும் உயிரிழந்த சமர்கானின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், விமானம் மூலம் அவரது உடலை அசாம் மாநிலத்திற்கு கொண்டு செல்ல ரூ.60,000 வழங்கினார்.  

Read Entire Article