சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை

4 hours ago 2

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. புறநகர்ப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றும் வீசியது. கடந்த சில நாட்களாக கொளுத்திய கோடை வெப்பத்திலிருந்து விடுபட்டு சென்னைவாசிகள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். சென்னையில் பிற்பகல் ஒரு மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டு, ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு வளசரவாக்கம், கிண்டி, அசோக் நகர், போரூர், மதுரவாயல், ஆயிரம் விளக்கு, வானகரம், சைதாப்பேட்டை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை மேற்கொள்கின்றனர்.

Read Entire Article