
சென்னை,
அமரன்' படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க, படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.இன்னும் பெயரிடாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதவிர சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, சுதா கொங்கரா படம் என அடுத்தடுத்த படங்களிலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.சுதா கொங்கரா இயக்கும் படத்துக்கு 'புறநானூறு' எனப் பெயரிடப்பட்டுள்ளது.இது ஜி.வி.பிரகாஷ் குமாரின் 100வது படமாகும்.
சிவகாத்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், பெருங்களத்தூர், வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதிப்பது போல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்காக ரோப் கட்டிக் கொண்டு சிவகார்த்திகேயன் பாலத்தின் மீது நின்றிருக்கிறார். இதனைக் காண ஏராளமானோர் அங்கு கூடியதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான விடியோ இணையளத்தில் வைரலாகி வருகிறது.