சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் காய்கறிகள் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது சிலவற்றின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.12-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.24-க்கு விற்பனை ஆகிறது. வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உதகை கேரட் ரூ.35-ல் இருந்து 50-க்கும் ரூ.80-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல், வாழைப்பூ ஒருகிலோ ரூ.25, குடை மிளகாய் 1-கிலோ.,ரூ.40, நெல்லிக்காய் 1-கிலோ ரூ.100, பட்டர் பீன்ஸ் 1-கிலோ ரூ.65, அவரைக்காய் 1-கிலோ ரூ.60, முட்டைக்கோஸ் 1-கிலோ ரூ.10, சுரைக்காய் 1-கிலோ ரூ.25க்கு விலைவாசியில் விற்கப்படுகிறதாக செய்திகள் தெரிவிக்கிறது. தொடர்ந்து, வெள்ளரிக்காய் ரூ.20, கத்திரிக்காய் ரூ.65, கொத்தவரங்காய் ரூ.40, காலிப்ளவர் ரூ.20, கேரட் ரூ.35, முருங்கைக்காய் ரூ.120, தேங்காய் ரூ.35க்கு விற்கப்படுகிறது.
இஞ்சி 1-கிலோ ரூ.80-150 வரையும், பீன்ஸ் 1-கிலோ ரூ.50, பூசணி 1-கிலோ ரூ.25, புடலங்காய் 1-கிலோ ரூ.40, வெண்டைக்காய் 1-கிலோ ரூ.60, முள்ளங்கி ரூ.25, பீர்க்கங்காய் 1-கிலோ ரூ.50, புடலங்காய் 1-கிலோ.,ரூ.40, மாங்காய் 1-கிலோ ரூ.120 என இன்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள்.
The post சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மீண்டும் உயர்வு appeared first on Dinakaran.