
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரெயில் (06113), ஏப்ரல் 19-ம் தேதியன்று சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
கொல்லம் சென்னை - சென்ட்ரல் சிறப்பு ரெயில் (06114), ஏப்ரல் 20-ம் தேதியன்று கொல்லத்தில் இருந்து இரவு 7:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயிலில் ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய லக்கேஜ்-கம்-பிரேக் வேன் பெட்டிகள் உள்ளது.
இந்த சிறப்பு ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திரிசூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாசேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயம்குளம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும்.
கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (06114), பெரம்பூரிலும் நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.