சென்னை: குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய் கைது

6 months ago 16

சென்னை,

சென்னை கீழ்பாக்கம் புல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், இளைய மகன் புனித்குமாருக்கு ஒன்றரை வயதும், மூத்த மகன் லட்சுமணன் குமாருக்கு நான்கரை வயதும் ஆகிறது. இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி மாலை திவ்யா தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தையும் அறுத்துவிட்டு, தன்னுடைய கழுத்தையும் அறுத்துக் கொண்டார்.

இதில் குழந்தை புனித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். லட்சுமணன் குமார் மற்றும் தாய் திவ்யா இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து, போலீசார் திவ்யா மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர். குழந்தை லட்சுமணன் குமாரை, தந்தை ராம்குமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ள போலீசார், தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article