சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா ரோப் காரில் பழுது - 20 நிமிடங்கள் வரை அந்தரத்தில் தொங்கிய 2 பெண்கள் மீட்பு

3 months ago 23
சென்னை கதீட்ரல் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப் லைன் ரோப் கார் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி அந்தரத்தில் நின்றது. இதனால், ரோப் காரில் பயணித்த இரண்டு பெண்கள் சுமார் 20 நிமிடங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது. பெண்கள் இருவரும் கத்தி கூச்சலிட்டு பயத்தில் அழத் தொடங்கிய நிலையில், ஊழியர்கள் போராடிப் பார்த்தும் கோளாறை சரி செய்ய முடியாததால் ரோப் காரை கயிறு கட்டி இழுத்து பெண்களை பத்திரமாக மீட்டனர்.
Read Entire Article