சென்னை கடற்கரைகளை சுத்தம் செய்து அழகுப்படுத்த தனியாருக்கு ஒப்பந்தம்: மாமன்ற கூட்டத்தில் முடிவு

4 hours ago 1

சென்னை: சென்னை கடற்கரைகளை சுத்தம் செய்து அழகுப்படுத்த தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் துணை மேயர் மகேஷ் குமார் ஆணையர் குமரகுருபரன் முன்னிலையில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது பாஜக உறுப்பினர் உமா ஆனந்த் சென்னை மாநகராட்சி எவ்வளவு கடன் வாங்கி உள்ளது அதற்கு எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள் ஒஎஸ்ஆர் லேண்ட் முறைகேடாக பயன்படுத்துவதாக செய்திகள் வருகின்றன என கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் அளித்த மேயர் சென்னை மாநகராட்சி 2024 ஆம் ஆண்டு ரூபாய் 3063 கோடி கடன் வாங்கி உள்ளோம் இதில் 1573 கோடி திருப்பி கட்டப்பட்டுள்ளது இன்னும் 1488 கோடி நிலுவையில் உள்ளது இதற்காக 8.5 கோடி வட்டி கட்டுகிறோம் காலாண்டுக்கு ஒரு முறை வாங்கிய கடன் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது என கூறினார். மண்டல குழு தலைவர் நேதாஜி யூ கணேசன் பேசும்போது: சென்னை மாநகராட்சியில் மேயர், துணை மேயரை, ஆணையாளரை, சந்திக்க முடிகிறது ஆனால் குறிப்பிட்ட ஒரு அதிகாரி அறையில் இருந்து கொண்டே மாமன்ற உறுப்பினரை சந்திக்க முடியாது என பணியாளரிடம் சொல்லி அனுப்புகிறார் சந்திக்க மாட்டேன் என போர்டு வைத்து விட்டால் நாங்கள் சந்திக்க செல்ல மாட்டோம் சில பணிகளை செய்யலாம் என நாங்கள் அவரை சந்திக்க நினைக்கிறோம்.

ஆனால் அவர் அனுமதி மறுக்கிறார். இதனால் அரசுக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. மேயர் பேசுகையில் இனி இது போல் நடக்காது பார்த்துக் கொள்கிறோம் என கூறினார் . காங்கிரஸ் உறுப்பினர் தீர்த்தி பேசுகையில்: எனது வார்டில் பயோ கேஸ் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது தற்போது புது பிளாண்ட் ஆரம்பிக்கின்றனர் ஆனால் எங்களிடம் எந்த ஆலோசனையும் செய்வதில்லை பொதுமக்களுக்கு பாதுகாப்புக்கு நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் மாநகராட்சி ஒப்பந்ததாரரிடம் இபியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மிக குறைந்த அளவு சம்பளம் கொடுக்கிறார்கள் மீதி பணத்தை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர் குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்குவதில்லை.

மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம் பேசுகையில்: மாநகராட்சி மண்டல குழு கூட்டங்களில் வருவாய் துறை சார்பில் அதிகாரிகள் யாரும் பங்கு பெறுவதில்லை எனது மண்டலத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளன மூன்று வார்டுகளில் உதவி பொறியாளர்கள் இல்லை அதை சரி செய்து தாருங்கள் மணலி பகுதி மாசு அதிகமாக உள்ள பகுதி மாலை நாலு மணிக்கு அம்மோனியா வாயு திறந்து விடப்படுகிறது 6:00 மணி வரை இது வருகிறது மூச்சு திணறல் ஏற்படுகிறது மாசு கட்டுப்பாடு வாரியம் இதை கண்காணிக்க வேண்டும் எனது பகுதியில் 11 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது 10 சதவீத பணிகள் தான் இன்னும் பாக்கியுள்ளது அதை விரைந்து முடிக்க வேண்டும் எஸ் ஆர் எப் தனியார் தொழிற்சாலை மாநகராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டை மடக்கி வைத்துள்ளது அதை மீட்டு தர வேண்டும் மணலி பகுதியில் ஆட்டு இறைச்சி கூடம் அமைத்து தர வேண்டும் என பேசினார். ஆணையாளர் குமரகுருபரன் இதற்கு பதில் அளித்து பேசுகையில், நான் தலைமைச் செயலாளருடன் பேசி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்காணிக்க கூறுகிறேன் உயர் அதிகாரிகளிடம் கூறி மண்டல கூட்டங்களுக்கு அனைத்து துறை அதிகாரிகள் வருவது போல் ஏற்பாடு செய்து தரப்படும் என கூறினார்.

நிலை குழு தலைவர் கே கே நகர் தனசேகரன் பேசியதாவது: தற்போதைய ஆணையர் இ பைலிங் சிஸ்டம் கொண்டு வந்துள்ளார் இதனால் நேர விரையம் தவிர்க்கப்பட்டுள்ளது இதற்காக அவருக்கு நான் நன்றி சொல்கிறேன் எனது வார்டில் 600 வீடுகளுக்கு இலவசமாக எந்தவித கட்டணமும் பெறாமல் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது இதற்காக நன்றி கூறுகிறேன் முதல்வர் மருந்தகம் அனைத்து வார்டுகளுக்கும் ஒன்று என்ற விதத்தில் தொடங்கப்பட வேண்டும் என பேசினார். சென்னையில் கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு வழங்க மாநகராட்சி முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது சென்னை மெரினா கடற்கரை சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் உள்ளது இங்கு தினந்தோறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் அதிக அளவில் குப்பைகள் சேகரமாகிறது. இதேபோன்று சீனிவாசபுரம் கடற்கரை எலியட்ஸ் கடற்கரைதிருவான்மியூர் கடற்கரை புது கடற்கரை இந்த கடற்கரைகள் சுமார் 95 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் குப்பைகள் சேகரம் ஆகின்றது. எனவே கடற்கரைகளை பகுதிகளாக பிரித்து சுத்தம் செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த பணிக்காக வாகனங்கள் வாங்கவும் ஊழியர்களை நியமித்து செயல்படுத்தவும்.முடிவு செய்யப்பட்டது. அதன்படி மெரினா கடற்கரையை சுத்தம் செய்து அழகுபடுத்த ரூ .7 கோடியே .9 லட்சம்மதிப்பீட்டில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று பெசன்ட் நகர்திருவான்மியூர் கடற்கரைபகுதிகளையும்சுத்தம் செய்ய ரூ 4 கோடி 50 லட்சம்மதிப்பீட்டில் செய்யவும்அனுமதிக்கப்பட்டுள்ளது.மொத்தம் ரூ 11 கோடி 50 லட்சம் செலவில் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான தொழில்களுக்கும் தொழில் உரிமை கட்டணம் 2024 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த கட்டணதத்தை குறைக்க வேண்டும் என்று வணிக பிரமுகர்களிடமிருந்து கோரிக்கை வரப்பட்டது.ஆயிரம் சதுர அடிக்கு தொழில் உரிமை கட்டணம் ரூ.3500 என்று இருந்ததை பிரித்து 500சதுர அடிக்கு ரூ. 1200 எனவும், 501 முதல் ஆயிரம் சதுர அடி வரை ரூ 3500 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 500 சதுர அடி வரை உள்ள மளிகை கடை உரிமையாளருக்கு தொழில் உரிமை வரி ரூ.2300 வரை குறையும் என்பது உள்ளிட்ட 117 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post சென்னை கடற்கரைகளை சுத்தம் செய்து அழகுப்படுத்த தனியாருக்கு ஒப்பந்தம்: மாமன்ற கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article