
சென்னை,
சென்னை ஐகோர்ட்டுக்கு வரும் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .அவசரகால வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் மே 7, 8 தேதிகளில் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.
நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மல் குமார் ஆகியோர் மே 14, 15, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோர் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிப்பார்கள்.