பணியிடங்கள் விவரம்:
1. சோப்தார் – 12 இடங்கள்
2. அலுவலக உதவியாளர் – 137 இடங்கள்.
3. உறைவிட உதவியாளர் – 87 இடங்கள்
4. ரூம் பாய் – 4 இடங்கள்
5. துப்புரவு பணியாளர் – 73 இடங்கள்.
6. தோட்டக்காரர் – 24 இடங்கள்.
7. வாட்டர்மேன் – 2 இடங்கள்
8. சேனிட்டரி வொர்க்கர் – 49 இடங்கள்
9. வாட்ச்மேன் – 4 இடங்கள்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது வரம்பு: 18 லிருந்து 32க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி.எஸ்டி, பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.15,700- ரூ.58,100.
தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அலுவலக உதவியாளர், உறைவிட உதவியாளர் ஆகிய பணிகளுக்கு இலகு ரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் தமிழ் மொழி திறனறியும் கேள்விகள், பொது அறிவு, ஹவுஸ் கீப்பிங், உணவு உற்பத்தி, அலுவலக பராமரிப்பு, கருவிகள் பராமரிப்பு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது.
https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.05.2025.
கட்டணம் செலுத்த கடைசி நாள்: 06.05.2025.
2. நீதிபதிகள், பதிவாளர்களுக்கு உதவியாளர்கள்
i) நீதிபதிகளுக்கு தனி உதவியாளர்- 28 இடங்கள். சம்பளம்: ரூ.56,100- ரூ.2,05,700 மற்றும் சிறப்பு ஊதியம்.
ii) ரிஜிஸ்டிரார் ஜெனரலுக்கு தனி செயலாளர்: 1 இடம். சம்பளம்: ரூ.56,100- ரூ.2,05,700.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான தகுதி: ஏதேனும் ஒரு பட்டத்துடன் ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் ஆங்கிலம், தமிழில் ஹையர்/சீனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆபீஸ் ஆட்டோமேஷன் ஆன் கம்ப்யூட்டரில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ் படிப்பு படிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஒரு குறிப்பிட்ட கால இடைவௌியில் இ்ந்த சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேர்வு கட்டணம்: மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் பொது மற்றும் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோருக்கு ரூ.1200. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது.
iii) பதிவாளர்களுக்கு தனி உதவியாளர்: 14 இடங்கள். சம்பளம்: ரூ.36,400- ரூ.1,34,200.
iv) துணை பதிவாளர்களுக்கு தனி கிளார்க்: 4 இடங்கள். சம்பளம்: ரூ.20,600- ரூ.75,900.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான தகுதி: ஏதேனும் ஒரு பட்டத்துடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் சுருக்கெழுத்தில் சீனியர்/ஹையர் கிரேடு மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் டைப்பிங்கில் சீனியர்/ஹையர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ்பாடத்தில் பட்டப்படிப்போ அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் படிப்பு தேர்ச்சி விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.
மேற்குறிப்பிட்ட பணிகளில் இடஒதுக்கீடு விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வயது: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு பொது பிரிவினருக்கு 01.07.2025 தேதியின்படி 18 லிருந்து 32க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 37க்குள். ஐகோர்ட் ஊழியர்கள் 47 வயது வரையிலும், முன்னாள் ராணுவத்தினர் 55 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னையில் தேர்வு நடைபெறும்.
https://www.mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.05.2025.
The post சென்னை ஐகோர்ட்டில் 439 இடங்கள் appeared first on Dinakaran.