சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகியிருந்தார்.
அப்போது, செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கவுதமன், என்.பரணிகுமார் ஆகியோர், இந்த வழக்கில் புதிதாக மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென்று கோரினர்.அதற்கு நீதிபதி, குறுக்கு விசாரணைக்காக சாட்சி ஆஜராகியுள்ள நிலையில், விசாரணையை எப்படி தள்ளிவைப்பது என்று கேட்டார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், விசாரணையை தள்ளிவைக்க எதிர்ப்பு தெரிவித்தார்.இதையடுத்து, விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, மேற்கொண்டு அவகாசம் கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.
The post செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.