செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரி வாதம்: புதிய மனு தாக்கல் செய்தால் பரிசீலனை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

2 hours ago 3

புதுடெல்லி: அமைச்சராக பதவியில் இல்லை என கூறி ஜாமீன் பெற்றுவிட்டு, தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். புதிதாக மனு தாக்கல் செய்தால் அதுதொடர்பாக வரும் அக்.22-ல் பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில்வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கில் 471 நாள் சிறைக்கு பிறகு செந்தில் பாலாஜி்க்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. இதன்காரணமாக அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

Read Entire Article