செண்பகராமநல்லூர் ஆரம்பப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விழா

4 months ago 11

தியாகராஜநகர், டிச.5: நாங்குநேரி ஒன்றியம் செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் புத்தாண்டில் மாணவர்களை வரவேற்கும் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் முருகம்மாள் சிவன்பாண்டியன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி சூர்யா, துணைத்தலைவி பாப்பா முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்று மாணவர்கள், பெற்றோருக்கு கேக் வழங்கினார். ஊராட்சி தலைவர் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு 3ம் பருவத்திற்கான இலவச பாட புத்தகம் மற்றும் குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சத்துணவு அமைப்பாளர் ரூத் ஜெனிபா, ராணி, காலை சிற்றுண்டி ஊழியர்கள் மாலா சங்கரவடிவு, பேச்சியம்மாள் பங்கேற்றனர் ஆசிரியர்கள் சாந்தி, ராஜாத்தி, சகுந்தலா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு முன்னாள் மாணவர் பிரதிநிதி விநாயகம் செய்திருந்தனர். ஆசிரியர் ரூபன் இமானுவேல் ராஜ் நன்றி கூறினார்.

The post செண்பகராமநல்லூர் ஆரம்பப்பள்ளியில் மாணவர்களை வரவேற்கும் விழா appeared first on Dinakaran.

Read Entire Article