நெல்லை,அக்.26: நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் செண்பகராமநல்லூர் ஆரம்பப்பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் பள்ளி மேலாண்மை குழு தலைவி சூர்யா தலைமையிலும், மேலாண்மை குழுவின் கல்வியாளர் கோபாலன் முன்னிலையிலும் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்று கூட்டத்திற்கான முக்கிய கருப்பொருள்களை விவாதித்து தீர்மானங்களை முன்மொழிந்தார். கூட்டத்தில் செண்பகராமநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கிய எட்வின், செண்பகராமநல்லூர் குறுவள மையத்தின் சார்பாக நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில் டிவிஎஸ் கிராம வளர்ச்சி அலுவலர் பவித்ரா, ஆசிரியை செல்வ லட்சுமி, கிராமாலயா ஆசிரியை ஸ்டெல்லா ஆகியோர் கலந்து கொண்டு டிவிஎஸ் சமூக சேவை அறக்கட்டளை பற்றி பேசினர். நிகழ்ச்சியில் அனைத்து பெற்றோர்கள் மற்றும் காலை சிற்றுண்டி ஊழியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சி பிரதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியை ஆசிரியைகள் சாந்தி, ராஜாத்தி, சகுந்தலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இடைநிலை ஆசிரியர் ரூபன் இம்மானுவேல் ராஜ் நன்றி கூறினார்.
The post செண்பகராமநல்லூர் ஆரம்பப்பள்ளி மேலாண்மை குழு கூட்டம் appeared first on Dinakaran.